உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அக்.22ல் உயர்கல்விக்கான கல்வி கடன் மேளா முகாம்

அக்.22ல் உயர்கல்விக்கான கல்வி கடன் மேளா முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் 2025--26ம் ஆண்டு உயர்கல்விக்கான கல்விக் கடன் மேளா கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் அக்.,22ல் காலை 10:30 மணிக்கு நடக்கிறது. உயர்கல்விக்கு சேர்க்கை பெற்றிருக்கும் மாணவர் களுக்கு கல்விக்கடன் வழங்குதல் மற்றும் விண்ணப்பங்களை மத்திய அரசின் பிரதமர் வித்யாலெட்சுமி திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க வழிகாட்டுதல் மற்றும் கல்விக்கடன் குறித்து சந்தேகங்களை தீர்த்து வைத்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். மாணவர்கள் கல்விக்கடன் பெறும் செயல்முறையை எளிமைப் படுத்துதல், பின் தங்கிய கிராமப்புற மாணவர் களுக்கு நிதி உதவியியை உறுதி செய்தல், பிரதமர் வித்யாலெட்சுமி இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைகளை விளக்குதல், கல்விக்கான நிதி தடையில்லாமல் அனைவரும் உயர்கல்வி பெற வழிவகை செய்தல் இம்முகாமின் நோக்கம். இந்தியா அல்லது வெளி நாடுகளில் உள்ள அங்கீ கரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, உயர் பட்டப்படிப்பு, தொழில்நுட்ப, தொழில் முறை பாட நெறிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் பற்கேற்கலாம். மேலும் இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் ஆதார், பான் கார்டு (மாணவர்,பெற்றோர்), 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், கல்லுாரி சேர்க்கை கடிதம், கட்டண விவர பட்டியல், வருமானச் சான்றிதழ், வங்கிகணக்கு எண் (மாணவர், பெற்றோர்), சாதிச்சான்றிதழ், பூர்விகச் சான்றிதழ், புகைப்படம் -4 (மாணவர், பெற்றோர்) மற்றும் வங்கி கோரும் பிற ஆவணங்கள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !