உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திருப்பாலைக்குடி பழங்கோட்டை பகுதியில் இருந்து கண்மாய்க்கரை குடியிருப்புக்கு செல்வதற்கு கிராவல் ரோடு வசதி உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பல ஆண்டுகளாக முறையான ரோடு வசதி இல்லாததால் அப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவர்களும் விவசாயிகளும், மழைக்காலங்களில் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும், குடிநீர், குறைந்த மின்னழுத்தம் என அடிப்படை வசதிகளின்றி அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை