உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தரமான விதை உற்பத்திக்கு உயிர் உரம் பயன்படுத்த வலியுறுத்தல்

 தரமான விதை உற்பத்திக்கு உயிர் உரம் பயன்படுத்த வலியுறுத்தல்

ராமநாதபுரம்: மாவட்ட விவசாயிகள் தரமான நெல் விதை உற்பத்திக்கு உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என ராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: உயிர் உரங்கள் தரமான விதை உற்பத்திக்கு ஊக்கமளிக்கிறது. பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் நுண்ணுாட்டச் சத்துக்களை உயிர் உரங்கள் கிடைக்க வழிவகை செய்கின்றன. தாவர ஹார்மோன்களையும் (ஆக்ஸின், ஜிப்ரலின்) பயிர் வளர்ச்சிக்கு அளிக்கின்றது. அஸோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, துத்தநாக பாக்டீரியா, மைக்கரைஸா போன்ற உயிர் உரங்கள் அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது. உயிர் உரங்களை பரிந்துரையின் படி பயிர்களுக்கு இடும் போது அதிக முளைப்புத்திறன், வீரியம் மிகுந்த விதைகள், பயிர் வளர்ச்சிக்கு சமச்சீரான சத்துகள் கிடைக்கின்றது. ரசாயன உரங்களின் உபயோகம் குறைவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது. வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வேளாண் பல்கலை விஞ்ஞானிகளை தொடர்பு கொண்டு பயிருக்கு உகந்த உயிர் உரம் இடும் முறை, கவனத்தில் கொள்ள வேண்டி நுட்பங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்