உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

திருவாடானை : அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மாணவர்களின் தனித்திறன்களை ஊக்கப்படுத்தவும் அரசு பள்ளிகளின் பல்வேறு சிறப்புகளை பெற்றோரிடம் கொண்டு சேர்க்கவும் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இவ்விழா கொண்டாட வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடுவதற்கு அதற்கான நிதி ஒதுக்கீடு மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆண்டு விழாவை குறிப்பிட்ட நாட்களுக்குள் நடத்துவதற்கு உத்தரவிட்டிருப்பதால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இது குறித்து தலைமையாசிரியர்கள் கூறுகையில், ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், தனித்திறன்களை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். எனவே அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ