உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மகளிருக்கான தொழில் முனைவோர் பயிற்சி

மகளிருக்கான தொழில் முனைவோர் பயிற்சி

திருப்புல்லாணி: - திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி மொத்தி வலசையில் வாப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மகளிருக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது.வாப்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனச் செயலர் அருள் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த சமூக ஆர்வலர் மாதுரி மற்றும் மீரா ஆகியோர் பயிற்சி விபரங்கள் பற்றி தெரிந்து கொண்டனர்.தொண்டு நிறுவன பணியாளர்கள் அசோக்குமார், மேனகா, கனிமொழி ஆகியோர் பேசினர். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பனை ஓலையில் செய்யக்கூடிய கலைநய பொருட்களை உற்பத்தி செய்வது, அவற்றை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பனை ஓலை மற்றும் தோல் இரண்டையும் சேர்த்து பொருள்கள் தயாரிப்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ