உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் சார்நிலை கருவூலம் அமையுங்கள்

கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் சார்நிலை கருவூலம் அமையுங்கள்

கீழக்கரை, : கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் சார்நிலை கருவூலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.கீழக்கரை தாலுகா அலுவலகம் 2015 முதல் செயல்படுகிறது. திருப்புல்லாணி, கீழக்கரை, உத்தரகோசமங்கை, ஏர்வாடி, இதம்பாடல் உள்ளிட்ட 26 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் தற்போது வரை சார்நிலை கருவூலம் இல்லை.இதனால் பல துறைகளை சேர்ந்த கருவூலப் பணிகளுக்காக தாலுகாவிற்கு உட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 18 கி.மீ.,ல் உள்ள ராமநாதபுரம் செல்லும் நிலை உள்ளது. இதனால் காலதாமதம், பண விரயம் ஏற்படுகிறது. கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகச் செயலாளர் முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது: பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலனுக்காக கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் சார்நிலை கருவூலம் அமைக்க வேண்டும் என்பது குறித்து கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை