மேலும் செய்திகள்
கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
6 hour(s) ago
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
6 hour(s) ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
6 hour(s) ago
ராமநாதபுரம் -உடலுக்கு எப்படி உடற்பயிற்சி தேவையோ அதே போல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு என்றார் சிக்மண்ட் ப்ராய்ட். நான் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே தலைசிறந்த நண்பன் என்றார் ஆபிரகாம் லிங்கன். புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவம் அறிந்த அரசு மாவட்டங்களில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. ராமநாதபுரத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் இணைந்து 6வது ஆண்டாக புத்தக கண்காட்சியை ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்.2 முதல் 12 வரை காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை நடத்துகின்றனர். மூலிகை கண்காட்சி
புத்தக கண்காட்சியில் இந்திய மருத்துவம் மற்றும் ேஹாமியோபதி, இயற்கை மருத்துவம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூலிகை செடிகள் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. இதில் 250 வகையான அரிய மூலிகைகள் அவற்றின் பெயர், குணப்படுத்தும் நோய் விவரங்களை மூலிகை செடியின் கீழ் எழுதி உள்ளனர். சித்த மருத்துவ தாது மருந்து சரக்குகள், ஜீவ மருந்து பொருட்களும் இடம் பெற்றுள்ளன.மேலும் 50 அழியும் நிலையில் உள்ள மூலிககைளை நோய்களுக்கு தக்கவாறு பிரித்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவ மாவட்ட அலுவலர் கீதா, ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, ஸ்ரீமுகநாகலிங்கம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ராமநாதபுரம் அருமை பெருமை அறிந்தேன்கீ.சீனிவாச கணேச பிரபு, தலைமையாசிரியர், வீரமாச்சான்பட்டி, கமுதி: சிறைக்கைதிகளுக்காக புத்தக தானம் வழங்கும் திட்டம் பாராட்டத்தக்கது. சிறை கைதிகளுக்கு அப்துல் கலாம் பற்றிய புத்தகம் வாங்கி தானமாக வழங்கியுள்ளேன். தொடர்ந்து இதனை செய்து வருகிறேன். வரலாற்று தடங்கள் அரங்கின் மூலம் ராமநாதபுரத்தின் அருமை, பெருமைகளை தெரிந்து கொண்டேன். இந்த ஆண்டு புதிய புத்தகங்கள், விஞ்ஞான ரீதியான புத்தகங்கள் அதிகம் விற்பனைக்கு வந்துள்ளன.மூளைத்திறன் வளர்ச்சிக்கான புத்தகங்கள்--சா.பாலசரஸ்வதி, முதுகலை மாணவி, சேதுபதி அரசு கல்லுாரி, ராமநாதபுரம்: இந்த ஆண்டு கண்காட்சியில் சிறு குழந்தைகள் மூளைத்திறன் வளர்ச்சிக்கான புத்தகங்கள் அதிகம் விற்பனைக்கு வந்துள்ளன. தொல்லியல் துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, சிறைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரங்குகளில் பயனுள்ள தகவல்கள் கிடைத்தன. குறைந்த விலையில் மரக்கன்றுகள் விற்பனை செய்வது வரவேற்கத்தக்கது. புத்தகங்களின் விலை மலிவு-சே.அருணா, ஆசிரியை, ராமேஸ்வரம்: புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் அனைத்தும் மாணவர்களின் ஆர்வத்தை துாண்டும் வகையில் இருந்தது. மாணவர்கள் நிறைய புத்தகங்களை வாங்கியுள்ளனர். அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மாணவர்களுக்கு மிக அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. விலையும் மலிவாக உள்ளது.
'கால் முதல் தலை வரையிலான' மருத்துவ சந்தேகங்களை 10 டாக்டர்களை பேட்டி கண்டு இந்த புத்தகத்தில் தந்துள்ளார் தினமலர் செய்தி ஆசிரியர் ஜி.வி.ரமேஷ்குமார். நமது உடல் தொடர்பாக டாக்டரிடம் நாம் கேட்க நினைத்திருந்ததை எளிய தமிழில் சிறப்பாக எழுதியுள்ளார். ஆசிரியர் : ஜி.வி.ரமேஷ்குமார். பதிப்பகம் : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட். விலை : ரூ.150 தீக்குள் விரலை வைத்தால்...திருவாசகத்தை படிக்க நேரம் இல்லாதவர்கள் கூட இந்த அன்புத் தீக்குள் விரலை வைத்து அதனால் தெய்வத்தை தீண்டும் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் ஒரே மூச்சில் எழுதப்பட்டது தான் தீக்குள் விரலை வைத்தால். உங்கள் விரலுக்காக இந்த திருவாசகத் தீ காத்துக்கொண்டிருக்கிறது. ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமிபதிப்பகம் : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட். விலை : ரூ.380 தமிழக கோயிற்கலைகள் இந்நுாலில் சங்க காலக்கலை, தமிழ்நாட்டுக் கோயில்கள், கோபுரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், என்ற தலைப்புகளில் சங்க காலம் தொடங்கி பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகரர் காலம் வரை கலை வளர்ந்த வரலாற்றை வண்ணப்படங்களுடன் குறைந்த விலையில் தொகுத்து வழங்கியுள்ளனர். ஆசிரியர்கள் : இரா.நாகசாமி, மா.சந்திரமூர்த்திபதிப்பகம் : தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைவிலை : ரூ.44
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago