உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெளிமாநில சிறப்பு ரயில்களை ராமேஸ்வரம் வரை... நீட்டிப்பு: மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் இனி சாத்தியம்

வெளிமாநில சிறப்பு ரயில்களை ராமேஸ்வரம் வரை... நீட்டிப்பு: மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் இனி சாத்தியம்

ராமநாதபுரம் -- ராமேஸ்வரம் இடையே 52 கி.மீ.,க்கு ரயில்வே வழித் தடம் மின்மயமாக்கும் பணி சமீபத்தில் நிறை வடைந்தது. கடந்த வாரம் மின்சார இன்ஜின் கொண்ட ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனை அறிக்கையின் அடிப் படையில் ராமநாதபுரம்--ராமேஸ்வரம் இடையே மின்சார இன்ஜின் கொண்டு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்தது. அதன்படி ராமேஸ் வரத்தில் இருந்து சென்னை, கன்னியாகுமரி, கோவை செல்லும் ரயில்கள் மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படுகின்றன. தற்போது ராமநாதபுரம் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்களை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: கர்நாடக மாநிலம் ஹூப்ளி, மைசூருவில் இருந்து ராமநாதபுரத்திற்கு வாரந்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ராம நாதபுரத்தில் இருந்து ஓசூர், பெங்களூருவுக்கு நேரடி ரயிலாக ஹூப்ளி விரைவு ரயில் உள்ளது. அதேபோல் தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ., வரை மைசூரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. சிறப்பு ரயில்களை ராமேஸ்வரம் வரை இயக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகி றோம். ஆனால் ரயில் வழித்தடம் மின்மயமாக்கல் பணி நடப்பதால் புதிதாக இயக்கப்படும் ரயில்களுக்கு டீசல் இன்ஜின் மாற்ற கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருக்கும். அதனால் ராமநாதபுரத்துடன் நிற்பதாக ரயில்வே தரப்பில் தெரிவித்தனர். இதனால் ராமேஸ் வரத்தில் இருந்து ஓசூர், பெங்களூரு போன்ற தொழில் நகரங்களுக்கு பணிக்கு செல்வோரும், கர்நாடகத்தில் இருந்து ராமேஸ்வரம் வரும் ஆன்மிக சுற்றுலா பயணிகளும் ராமநாதபுரம் வந்து பயணிக்க வேண்டியுள்ளது. தற்போது ரயில்வே வழித்தடம் மின்மயமாக்கும் பணி நிறைவடைந்து மின்சார இன்ஜின் கொண்டு விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்களை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை