உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்தான விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கு

கண்தான விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மற்றும் மதுரை கண் மருத்துவமனை இணைந்து 40வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து கண்தான விழிப்புணவுர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஹனுமந்தராவ் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவக்கல்லுாரியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா வரை கண்தானம் செய்ய வலியுறுத்தி கோஷமிட்டபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கூட்ட அரங்கில் கண்தானம் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடந்தது. கண்தானம் குறித்து கருத்துரைகள் வழங்கப்பட்டது. அப்போது மூத்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் சந்திரசேகரனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் (பொ) கணேஷ்பாபு, கண் மருத்துவத்துறை தலைமை மருத்துவர் ராஜா, கண் மருத்துவர்கள் காயத்ரி, சக்திவேல், சியாமளா, சுபசங்கரி, பிரித்திகா, தேஜஸ்வி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி