உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க விவசாயிகளின் நடை பயணம்; போலீஸ் அனுமதி மறுப்பால் கைவிடப்பட்டது

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க விவசாயிகளின் நடை பயணம்; போலீஸ் அனுமதி மறுப்பால் கைவிடப்பட்டது

ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி துவங்கிய பிரசார பயணத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பயணம் கைவிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்க கோரி ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து வேன் மூலம் நேற்று காலை பிரசார பயணம் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமையில் துவங்கியது. இந்நிலையில் பிரசார பயணத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் போலீசாருடன் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு வினர் மற்றும் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆழ்துளை கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் விவசாயிகளிடம் விழிப் புணர்வு ஏற்படுத்துவதுடன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ராமநாதபுரம் மாவட்டத்தை அறிவிக்க வேண்டியும் இந்த பிரசார பயணம் திட்டமிடப்பட்டது. நேற்று காலை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்.எஸ்.மங்கலத்தில் கூடினர். இந்நிலையில் பிரசார பயணத்திற்கு போலீசார் தடை விதித்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரசார பயணம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை