உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டியில் கடல் நீர்மட்டம் மீண்டும் உயர்வால் அச்சம்

தொண்டியில் கடல் நீர்மட்டம் மீண்டும் உயர்வால் அச்சம்

தொண்டி; தொண்டியில் கடல் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்ததால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக கட்டி நிறுத்தினர். தொண்டி கடற்கரையில் கடல் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு புதுக்குடி பகுதியிலும், மரைன் போலீஸ் ஸ்டேஷன் வாசல் வரை கடல் அலை வந்தது. இது குறித்து மகாசக்திபுரம் மீனவர்கள் கூறியதாவது:சில நாட்களாக தொண்டியில் கடல் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு இதே போல் கடல் நீர் மட்டம் உயர்ந்த போது கடலோரத்தில் நிறுத்தியிருந்த ஒரு படகு மாயமானது. அந்தப் படகு சோலியக்குடி-புதுப்பட்டினம் இடையே கடற்கரை ஓரத்தில் ஒதுங்கியிருந்ததை பார்த்து மீட்டோம். இதனால் தற்போது அனைத்து படகுகளையும் நன்றாக கட்டி வைத்துஉள்ளோம். அடிக்கடி கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவது வியப்பாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை