உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொம்பூதி வயல்களில் பாதிப்பு ஏற்படுத்தும் காட்டு மாடுகள்

கொம்பூதி வயல்களில் பாதிப்பு ஏற்படுத்தும் காட்டு மாடுகள்

உத்தரகோசமங்கை: -உத்தரகோசமங்கை அருகே கொம்பூதி, கருக்காத்தி, பனையடியேந்தல், மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காட்டு மாடுகள் உள்ளன. 50 முதல் 80 மாடுகள் கூட்டமாக சென்று விவசாயிகள் சாகுபடி செய்த நெல், மிளகாய், மல்லி, பருத்தி உள்ளிட்ட பயிர்களை அழித்து துவம்சம் செய்கிறது. இதனால் காட்டு மாடுகளை விரட்டுவதற்கு வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது:ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் திரியும் காட்டு மாடுகள் கொம்பால் முட்டி தாக்குகின்றன. எனவே விவசாயிகள் இவற்றை விரட்டுவதற்கு சிரமத்தை சந்திக்கின்றனர். காட்டு மாடுகள் தொல்லையில் இருந்து பாதுகாக்க பட்டாசு வெடித்தால் அதற்கு வனத்துறையினர் கட்டுப்பாடு விதிக்கின்றனர்.காட்டுப்பன்றி மற்றும் மான்களாலும் பாதிப்பை சந்தித்து வருகிறோம். எனவே வனத்துறையினர் விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ