உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடர் மழையால் மீன் விலை உயர்வு

தொடர் மழையால் மீன் விலை உயர்வு

தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் மீன்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்கிறது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்பதால் மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையை அரசு விடுத்துள்ளது. இதனால், கிழக்கு கடற்கரை பகுதிகளான தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, மோர் பண்ணை, காரங்காடு, தொண்டி உட்பட பல்வேறு பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், அப்பகுதிகளில் உள்ள ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடற்கரையோரம் கரை வலை மூலமும், குறைந்த தொலைவில் துாண்டில் போட்டும் மட்டுமே சில மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்கின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. துாண்டில் மற்றும் கரை வலையில் பிடித்து வரப்படும் குறைந்த அளவு மீன்களை கூடுதல் விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ 600க்கு வி ற்கப்பட்ட ஷீலா ரூ.900த்திற்கும், 400க்கு விற்கப்பட்ட ஊளி 600க்கும், 500க்கு விற்கப்பட்ட கடல் பாறை 800க்கும், 300க்கு விற்பனையாளர் கணவா 500க்கும், 450க்கு விற்பனையான முரல் 800க்கும், 550க்கு விற்பனையான நண்டு 1100க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை