உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் கொண்டல் காற்று வீசி வருவதால் மீனவர்கள் கவலை; மீன்கள் கிடைக்காததால் வருவாய் குறைவு

கடலில் கொண்டல் காற்று வீசி வருவதால் மீனவர்கள் கவலை; மீன்கள் கிடைக்காததால் வருவாய் குறைவு

ஆர்.எஸ்.மங்கலம், மே 14- கிழக்கு கடற்கரையோரம் கடல் பகுதியில் கொண்டல் காற்று சுழன்று சுழன்று வீசுவதால் போதிய மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை. இதனால் மீன்பிடி தடைக்காலத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் எதிர்பார்த்த வருவாய் இன்றி சிரமப்படுகின்றனர்.கிழக்கு கடற்கரை தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, கடலுார், முள்ளிமுனை, தொண்டி உள்ளிட்ட கடலோரப் பகுதி மீனவர்கள், விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மூலம் மீன் பிடித்து தொழில் செய்கின்றனர்.தற்போது மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வண்ணம் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் விசைப்படகு மூலம் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டு படகு மீனவர்கள் மட்டுமே குறிப்பிட்ட எல்லை வரை சென்று மீன் பிடி தொழில் செய்கின்றனர்.கடல் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை, மீனவர்களுக்கு ஏற்றதாக அமையாததால் குறைந்த அளவிலான மீன்களே கிடைத்து வருவதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.மீனவர்கள் கூறுகையில், கடல் பகுதியில் கொண்டல் காற்று சுழன்று சுழன்று வீசுவதால் போதிய மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை. போதிய மீன்கள் கிடைக்காததால் வருமானம் குறைந்துள்ளதாக கவலை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !