உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குறை தீர்க்கும் கூட்டத்தினை  நடத்த மீனவர்கள் வலியுறுத்தல்

குறை தீர்க்கும் கூட்டத்தினை  நடத்த மீனவர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி 3 மாதங்களுக்கு மேல் ஆவதால் குறை தீரக்கும் கூட்டத்தினை உடனடியாக நடத்த வேண்டுமென மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் கடலோரப்பகுதியை அதிகமாக கொண்ட மாவட்டம் ஆகும். கன்னிராஜபுரம் முதல் தொண்டி வரையுள்ள பகுதிகள் அனைத்தும் கடற்கரைப்பகுதியாகும். மூக்கையூர், ஏர்வாடி, சாயல்குடி, கீழக்கரை, பெரியபட்டிணம், மண்டபம், தங்கச்சிமடம், ராமேஸ்வரம், தேவிட்டினம், தொண்டி, உள்ளிட்ட அனைத்துப்பகுதிகளும் கடற்கரைகளை கொண்ட பகுதிளாகும். மீனவர்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மீனவர்கள் தரப்பில் மாதம் தோறும் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.மாவட்ட நிர்வாகம் முறையாக மாதம் தோறும் மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்துவதில்லை. பாக்ஜலசந்தி, மன்னார்வளைகுடா பகுதியில் மீன் பிடிக்கும் தொழிலில் பல்வேறு பிரச்னைகளை மீனவர்கள் சந்தித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும், என மீனவர்கள் தரப்பில் எதிர்பார்க்கின்றனர். 3மாதமாக மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் பெயரளவில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்திய இலங்கை சர்வதேச கடல் பகுதியாகும். இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதும். படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் இலங்கை அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண கலெக்டர், மீன் வளத்துறை அதிகாரிகளால் மட்டுமே செய்ய முடியும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தினை நடத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை