உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாசிபட்டினம் தர்கா கொடியேற்றம்

பாசிபட்டினம் தர்கா கொடியேற்றம்

தொண்டி : தொண்டி அருகே பாசிபட்டினம் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு உரூஸ் எனப்படும் மத நல்லிணக்க விழாவிற்காக நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முன்னதாக அடிமரம் நடப்பட்டு அதனை தொடர்ந்து நடந்த கொடி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முதல் நாள் இரவு தலை பிறையும், நேற்று ரத ஊர்வலமும், இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது. ஜூலை 9 ல் ஹத்தம், தமாம், சிறப்பு பயான், விருந்து உபசரிப்பும் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக மறுநாள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறும்.அதனை தொடர்ந்து அதிகாலையில் சந்தனம் பூசும் வைபவம், ஜூலை 26ல் கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பாசிபட்டினம் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை