உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு 

தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு 

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் ரோட்டோரங்களில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.கோடை வெப்பம் அதிகரித்திருக்கும் நிலையில் ரோட்டோரங்களில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமேற்றியை ஊசி மூலம் செலுத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தர்மர், ஜெயராஜ் ஆகியோர் ராமநாதபுரம் டவுன், பாரதி நகர் பகுதிகளில் ரோட்டோரம் விற்பனை செய்யப்படும் தர்பூசணி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் ஏதும் இல்லை. பழ வியாபாரம் செய்பவர்கள் பழங்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் உரிய முறையில் பில் பெற்றிருக்க வேண்டும். விதைகள் உள்ள பழங்களை வாங்கி விற்பனை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினர். உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களில் சந்தேகம் இருந்தால் தமிழ்நாடு முழுவதும் 94440 42322 என்ற அலைபேசியில் புகார் தெரிவிக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை