உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குறுவட்டார அளவில் கால்பந்து போட்டி

குறுவட்டார அளவில் கால்பந்து போட்டி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் குறுவட்டார அளவிலான கால்பந்து போட்டி முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. தாளாளர் ஜஹாங்கீர், கல்விக்குழு தலைவர் காஜா நஜிமுதீன், உதவி தலைமை ஆசிரியர் காமிலாபானு முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் கமால்பாட்ஷா வரவேற்றார். முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து 14,17,19 வயது பிரிவின் அடிப்படையில் போட்டி நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெறும். போட்டி நடுவர்களாக முகமதுஉசேன், சிவக்குமார், பாலசுந்தரம், வடிவேல் முருகன், கோகிலா இருந்தனர். போட்டி ஏற்பாடுகளை எஸ்.தரைக்குடி உடற்கல்வி ஆசிரியர் அந்தோணி இளவரசன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை