மேலும் செய்திகள்
கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
5 hour(s) ago
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
5 hour(s) ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
5 hour(s) ago
-ராமநாதபுரம் : -ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, முதுகுளத்துார் வீரதுரை, தனது மூன்று குழந்தைகளுடன் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் இடம் புகார் மனு அளித்தார். மனுவில் கூறியுள்ளதாவது: ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை வாங்கித் தருவதாக கூறி விழுப்புரத்தைச் சேர்ந்த நபருக்கு வங்கிக் கணக்கில்ரூ. 14லட்சம் செலுத்தினேன்.அவர் நியமன ஆணையை அனுப்பினார். இதனை நம்பி ராஜஸ்தானுக்கு பணியில் சேர்வதற்காக சென்றேன். அங்கு சென்றபோது அதுபோலி பணி நியமன ஆணை எனத்தெரியவந்தது.பணத்தை திருப்பி கேட்டபோது பல தவணைகளாக ரூ.4லட்சத்து 33ஆயிரத்தை கொடுத்தார். மீதி ரூ.9லட்சத்து 67 ஆயிரம் பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி செய்கின்றனர். மூன்று குழந்தைகளுடன் சிரமப்படுகிறேன். எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்றார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago