உள்ளூர் செய்திகள்

இலவச மாதிரி தேர்வு

கமுதி; கமுதி அருகே கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம், மூக்கையாத் தேவர் அரசு போட்டி தேர்வு இலவச பயிற்சி மையம் சார்பில் வகுப்புகள் நடக்கிறது. இங்கு அனைத்து அரசு போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சிகள் நடப்பதால் ஏராளமானோர் பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளதையொட்டி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன் பயன்பெறும் வகையில் இலவச மாதிரி தேர்வு செப்.,21ல் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டோ மற்றும் ஹால் டிக்கெட் நகல் கொண்டு வந்து தேர்வு எழுதி பயன் அடையலாம். தேர்வு எழுதிய அன்றே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் படும் என்று முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி