மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ கூட்டம்
01-Sep-2025
பரமக்குடி; பரமக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலு வலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தார். மகளிர் அணி செயலாளர்கள் ஆனந்தி, மாரியம்மாள், சாந்தகுமாரி, துணை தலைவர்கள் தென்னரசு, முருகேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பூப்பாண்டியன் வரவேற்றார். செப்., மாதம் இறுதிக்குள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய் வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பள்ளி கல்வித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள பல ஆயிரம் ஆசிரி யர் பணியிடங்களை நிரந்தர பணி அடிப்படையில் நிரப்பி மாணவர்களின் கற்றலுக்கு வழி வகுக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினர். மாவட்ட பொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.
01-Sep-2025