வாசகர்கள் கருத்துகள் ( 1 )
TENDER TO REMOVE THIS FOR RS.100 CR
மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
12-May-2025
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோயில் தீர்த்த குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை பரவி கிடப்பதால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடாமல் செல்கின்றனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உப கோயிலான நம்புநாயகி அம்மன் கோயில் ராமேஸ்வரம் புதுரோடு கிராமம் அருகே உள்ளது. இக்கோயிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதானத் திட்டம் உள்ளது.இக்கோயிலில் பக்தர்கள் மொட்டையடித்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதனால் கோயில் அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்த குளம் அமைத்தனர். ஆனால் தீர்த்த குளத்தை கோயில் நிர்வாகம் பராமரிக்காததால் தற்போது பாலிதீன் கழிவுகள், குப்பை பரவி கிடக்கிறது. இதனை அகற்றி பராமரிக்காவிடில் தீர்த்த குளம் துர்நாற்றம் வீசும் அவலம் உள்ளது. இதனால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடாமல் செல்கின்றனர்.
TENDER TO REMOVE THIS FOR RS.100 CR
12-May-2025