மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் 2 பேருக்கு டெங்கு
03-Nov-2024
ராமநாதபுரம்,:ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று மதியம் மகாத்மா காந்திநகர் பகுதியில் இருந்த 50 ஆண்டு பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது.இதில் மரத்திற்கு கீழ் நின்ற கார் நொறுங்கியது. காரில் யாரும் இல்லை. இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றினர். ராமநாதபுரத்தில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இவற்றை அப்புறப்படுத்த வந்த தீயணைப்பு வீரர்களிடம் மரம் அறுக்கும் இயந்திரம் இல்லாததால் அரிவாளால் வெட்டினர். மணல் அள்ளும் இயந்திரம் வந்த பிறகே மரத்தை முழுமையாக அப்புறப்படுத்த முடிந்தது.
03-Nov-2024