மேலும் செய்திகள்
மழையால் கோடை விவசாயிகள் மகிழ்ச்சி
13-Jun-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பல மாதங்களுக்கு பிறகு பலத்த மழை பெய்ததால் ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் பாசனத்தில் கோடை நெல் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களுக்கு மழை ஏற்றதாக அமைந்தது. மகசூல் நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்த நிலையில் இந்த மழையால் கோடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் மழையால் குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.
13-Jun-2025