உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் கொட்டி தீர்த்தது கனமழை

பரமக்குடியில் கொட்டி தீர்த்தது கனமழை

பரமக்குடி: பரமக்குடியில் நேற்று மதியம் அரை மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் துவங்கி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. தொடர்ந்து நேற்று மதியம் 2:15 மணிக்கு துவங்கிய கனமழை 2:45 மணி வரை பெய்தது. திடீர் மழையால் மாட்டு பொங்கல் உள்ளிட்ட விழாவிற்கு பொருட்களை வாங்க வந்தவர்கள், வியாபாரிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்நிலையில் தேங்கிய மழை நீரால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரோட்டில் கழிவு தேங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ