உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு வழிகாட்டும் உயர் கல்வி உதவி மையம் 

மாணவர்களுக்கு வழிகாட்டும் உயர் கல்வி உதவி மையம் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு வழிகாட்டி, ஆலோசனை வழங்க உயர்கல்வி உதவி மையம் செயல்படுகிறது.மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களும், உயர் கல்வியை தொடர வேண்டும். அதற்குரிய தக்க ஆலோசனை வழங்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனை மற்றும் உதவி மையம் துவக்கப்பட்டு மே 19 முதல் செயல்படுகிறது.மாணவர்கள் 04567 -228 016, 228 021 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது கலெக்டர் அலுவலக தரை தளத்தில் உள்ள உயர் கல்வி உதவி மையம் அலுவலகத்தில் நேரடியாகவோ தொடர்பு கொண்டு உயர்கல்வி தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவு பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை