ஹோமியோபதி தினம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்பட்டது. ஆங்கில மருத்துவ முறைக்கு அடுத்த இடத்தில் ஹோமியோபதி மருத்துவம் உள்ளது. இதன் தந்தை டாக்டர் சாமுவேல் ஹனிமன் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் ஏப்.,10 உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஹோமியோபதி பிரிவில் டாக்டர் கீதாலெட்சுமி தலைமையில் ஹோமியோபதி தினம் கொண்டாடப்பட்டது.