உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  லிப்டில் தவறி விழுந்து விடுதி பணியாளர் பலி

 லிப்டில் தவறி விழுந்து விடுதி பணியாளர் பலி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதி லிப்டில் தவறி விழுந்த பணியாளர் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும் விடுதியில் பணி செய்தவர் அபுஹனிபா, 55. இவர், விடுதி 3வது மாடியில் தங்கிய பக்தர்களுடன் நேற்று லிப்டில் தரை தளத்திற்கு வந்துள்ளார். அப்போது, லிப்ட் பழுதாகி நடுவழியில் நின்றது. பின், சக ஊழியர்கள் உதவியுடன் லிப்ட்டில் தவித்த பக்தர்களை மாற்று வழியில் மீட்டார். இதையடுத்து, அபுஹனிபாவும் இறங்க முயன்ற போது, தவறி கீழே விழுந்து காயமடைந்தார். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் அபுஹனிபா இறந்தார். ராமேஸ்வரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை