உள்ளூர் செய்திகள்

மழைக்கு வீடு சேதம்

முதுகுளத்துார்; முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மழை பெய்தது. இதனால் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் வெளிபுறமாக இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அவர் சேதமடைந்த வீட்டில் வசிக்கும் நிலை உருவாகியுள்ளது. அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ