உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிநீர் வரல, குப்பை அள்ளவில்லையா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்

குடிநீர் வரல, குப்பை அள்ளவில்லையா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளான தெரு விளக்கு, குடிநீர் மற்றும் குப்பை தொடர்பானபுகார்களை 1800 425 7040 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.மேலும், போகலுார் - - 74029 07610, கடலாடி -- 74029 07614, கமுதி -- 74029 07613, மண்டபம் -- 74029 07606, முதுகுளத்துார் -- 74029 07612, நயினார்கோவில் -- 74029 07611, பரமக்குடி -- 74029 07609, ஆர்.எஸ்.மங்கலம் -- 74029 07607, ராமநாதபுரம் -- 74029 07604, திருப்புல்லாணி -- 74029 07605, திருவாடாணை -74029 07608 ஆகிய அலைபேசி எண்ணில் 'வாட்ஸ்ஆப்'ல் மக்கள் தங்களது ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடிப்படை தேவைகள் தொடர்பான புகார்களைதெரிவிக்கலாம்.மார்ச் 31 க்குள் குடிநீர், சொத்துவரி, தொழில்வரி ஆகிய வரிகளை நேரடியாக அல்லது https://vptax.tnrd.tn.gov.inஎன்ற இணையதளத்திலும் வரியை செலுத்தலாம்.குறிப்பிட்ட காலத்தில் செலுத்த தவறினால் ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி