இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் தலைமை ஆசிரியர் காதர் முகைய்தீன், பேரூராட்சி தலைவர் ஷாஜகான், கவுன்சிலர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர். சிறப்பு துவா செய்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. உடன் போலீசார், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், மக்கள் உட்பட அனைத்து மதத்தினரும் சமூக நல்லிணக்கத்தோடு கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் செய்தனர். * ஆர்.எஸ்.மங்கலம் பழனி பாபா மாணவர் அறக்கட்டளை சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடந்தது. ஜமாத் நிர்வாகிகள் உட்பட அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.