உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நவபாஷாண நவகிரகத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

நவபாஷாண நவகிரகத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

தேவிபட்டினம்:விடுமுறை தினங்களில் தேவிபட்டினம் நவபாஷாண நவகிரகத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. இங்கு ஆடி, தை அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நவக்கிரகத்தை பக்தர்கள் எளிதாக வழிபடும் வகையில் கடலுக்குள் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பதாலும், கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுதாலும், கடந்த இரண்டு நாட்களாக, நவபாஷாணத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை