உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சுயேச்சை வேட்பாளர் ஓட்டுகள் பிரதான கட்சியினர் திக்... திக்...

 சுயேச்சை வேட்பாளர் ஓட்டுகள் பிரதான கட்சியினர் திக்... திக்...

திருவாடானை: திருவாடானை தொகுதியில் பிரதான கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் சுயேச்சைகளும், சிறிய கட்சிகளும் ஓட்டுகளை பிரிப்பதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. திருவாடானை தொகுதியை பொறுத்தவரை கடந்த காலங்களில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாகவே இருந் துள்ளது. ஒரு ஓட்டு கூட முக்கியம் என்ற நிலையில் சுயேச்சை இங்குள்ள 17 சுயேச்சை வேட்பாளர்கள் பிரிக்கும் 500 அல்லது 1000 ஓட்டுகள் கூட பெரிய கட்சியின் வெற்றியை தடுத்து நிறுத்தி விடும் வல்லமை கொண்டது. வேட்பாளர்கள் அதிகம் என்பதால் பிரசார களத்தில் சத்தம் அதிகம். ஆனால் அமைதியாக இருக்கும் வாக்காளர்களின் மனநிலை யாருக்கு சாதமாக இருக்கிறது என்பது அறிய முடியாத நிலையாக உள்ளது. கடந்த காலங்களில் சில ஆயிரம் ஓட்டுகளில் வெற்றி கை நழுவிய வரலாறும் இந்த தொகுதியில் உண்டு. சுயேச்சைகள் தன் சொந்த செல்வாக்கை வைத்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகளை பிரித்தால் அது பிரதான கட்சிகளின் வெற்றியை பாதிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை