உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டம்

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டம்

கடலாடி: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கி கடலாடி கிளை முன் கோரிக்கையை வலியுறுத்தி மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆப்பனுார் செந்துார் பாண்டியன், மேலக்கிடாரம் முருகேசன், செவல்பட்டி செந்துார் பாண்டி உட்பட ஏராளமான பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்களிடம் அபராத தொகை இரு மடங்கு வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.கூட்டுறவு ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை அதிகமாக இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும். தமிழகம் முழுவதும் ரேஷன் கடை விற்பனையாளர்களை சொந்த மாவட்டத்திலும் குறைந்தது 10 கி.மீ., துாரத்திற்கு அவர்களுடைய குடும்பம்உள்ள ஒன்றியத்திலேயே மாற்றித் தர அரசு ஆணையிட வேண்டும் உள்ளிட்ட பிரதான மூன்று அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.கோரிக்கைக்கான தீர்வு அல்லது பேச்சுவார்த்தை நடைபெறும் வரை தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ