உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெற்பயிருக்கு நவ.15க்குள் காப்பீடு செய்ய வலியுறுத்தல்

நெற்பயிருக்கு நவ.15க்குள் காப்பீடு செய்ய வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் 2025-26ம் ஆண்டில் நெற்பயிருக்கு நவ.,15க்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக, கண்மாய் பாசனத்தில் 3லட்சம் ஏக்கருக்கும் மேல் ஆண்டு தோறும் நெல் சாகுபடி நடக்கிறது.வடகிழக்கு பருவமழையை நம்பி அக்., முன்னதாக ஆடிபெருக்கில் வயலை தயார் செய்து செப்.,ல் நெல் விதைக்கின்றனர். பலத்த மழை, வறட்சியால் நெற்பயிர்களில் ஏற்படும் இழப்பை தவிர்க்க பிரதமரின் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 2025-26ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு திட்டத்தில் காப்பீட்டு தொகை ரூ.25 ஆயிரத்து 825க்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.387.39 பிரிமியத் தொகையை நவ.,15க்குள் செலுத்த வேண்டும். இதே போன்று மிளகாய் ஏக்கருக்கு காப்பீட்டுத்தொகை 28 ஆயிரத்து 900க்கு பிரிமியம் 1445 கட்ட வேண்டும். மிளகாய்க்கு 2026 ஜன.,1க்குள் பதிவு செய்ய வேண்டும். வாழைக்கு ரூ.89ஆயிரத்து 600க்கு பிரிமியம் ரூ.3844 செலுத்தி 2026 பிப்.,28க்குள்ளும், கொத்தமல்லிக்கு ரூ.13,250க்கு பிரிமியம் 356 ரூபாயை 2026 ஜன.,17க்குள் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு அருகேயுள்ள வேளாண்உதவி இயக்குநர் அலுவலகத்தை அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைஇணை இயக்குநர் அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை