உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தல்

டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தல்

தொண்டி: தொண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தபட்டுள்ளது.தொண்டி மக்கள் நல வளர்ச்சி சங்கத் தலைவர் சுலைமான் கூறியதாவது: அரசு பஸ் டெப்போ கேட்டு 18 ஆண்டுகளாக போராடி வருகிறோம். நேற்று முன்தினம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கத்தை சந்தித்து மனு கொடுத்தோம். அதில் தொண்டியில் உள்ள மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லை. இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கபட்டுள்ளனர். எனவே கூடுதல் டாக்டர்கள் நியமிக்க அரசை வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ