காட்சி பொருளாக மாறிய கடலாடி ஐ.ஓ.பி., ஏ.டி.எம்.,
கடலாடி: கடலாடி நகர் பகுதியில் ஐ.ஓ.பி., வங்கி உள்ளது. 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் இந்நிலையில் வங்கி அருகில் தனி அறையில் ஏ.டி.எம்., இயந்திரம் உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க முடியாத அளவிற்கு தொடர்ந்து சிரமம் அடைகின்றனர். இதனால் பொதுமக்கள் தனியார் இ-சேவை மையங்களுக்கு சென்று கூடுதல் தொகை செலவழித்து ஏ.டி.எம்., மூலமாக பணம் பெறுகின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயி களின் நலன் கருதி வங்கியில் ஏ.டி.எம்., இயந்திரத்தை முறையாக செயல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.