உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை கோயிலில் கலையரங்கம் பூமி பூஜை

திருவாடானை கோயிலில் கலையரங்கம் பூமி பூஜை

திருவாடானை: திருவாடானை கோயிலில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்புறம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கலையரங்கம் கட்டுவதற்கு ரூ. 12 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று காலை 9:00 மணிக்கு நடந்தது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார், தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன், காங்., வட்டார தலைவர் கணேசன் மற்றும் 22 கிராம நாட்டார்கள், திருவாடானை நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ