உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா

மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா

ராமநாதபுரம்; காமராஜர் பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக அரசு விழா கொண்டாடப்பட்டது. கட்சியினர், சமூக ஆர்வலர்களும் விழா கொண்டாடினர்.ராமநாதபுரம் காங்., கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. ராமநாதபுரம் மத்திய கொடிக்கம்பம் பகுதியில் நடந்த விழாவில் காமராஜர் உருவ படத்திற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.மாணவர்களுக்கு நோட்டு, எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேதுபாண்டியன், வலம்புரி முனியசாமி, பாஸ்கரசேதுபதி, ஆறுமுகம், அழகு, ஜெயக்குமார், ராமலட்சுமி, அபுதாகிர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நகர் தலைவர் கோபி செய்திருந்தார்.n ராமநாதபுரம் சேதுபதி நகர் அன்னை சரஸ்வதி பூங்காவில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நடந்தது. ராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி சங்கத்தின் தலைவர் பொறியாளர் மாரி, செயலாளர் அமீன்சாதிக், துணை கவர்னர் சோமசுந்தரம், அன்னபூர்ணாதேவி, வினோஜ் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.n உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் அப்பள்ளியின் கபடி குழு மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பசுமை ஆர்வலர் சுபாஷ்சீனிவாசன் செய்திருந்தார்.n கமுதியில் சத்திரிய நாடார் உறவின் முறை சார்பில் கொண்டாடப்பட்டது. முறைகாரர் தங்கராஜ், அம்பலக்காரர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. காமராஜர் உருவப் படம் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதியில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது மாணவர்கள் சிலம்பம் பல்வேறு சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.n முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. அப்போது பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் திருவுருவப்படத்திற்கு தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மலர்துாவி மரியாதை செய்தனர்.இனிப்புகள் வழங்கப்பட்டது.n முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ஜோசப்ராஜ் தலைமையில் ஆசிரியர்கள் மாணவர்கள் காமராஜர் படத்திற்கு மலர்துாவி மரியாதை செய்தனர்.n ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தாளாளர் கோகிலா தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக ஆலோசகர் ஜேக்கப் முன்னிலை வகித்தார். முதல்வர் பிரீத்தா வரவேற்றார். மாணவர்களுக்கு காமராஜர் குறித்த பல்வேறு தலைப்புகளில் கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் முத்துக்கண்ணு நன்றி கூறினார்.n ராமநாதபுரம் பாரதிநகர் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்கள் பங்கேற்ற பேச்சு போட்டி, கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி நடந்தது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தாளாளர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். முதல்வர் சாந்தினி முன்னிலை வகித்தார்.n ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளுந்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோதி தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் பாண்டியன் மாணவர்களுக்கு துணிப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார். ரோட்டரி நிர்வாகிகள் சுப்பிரமணியன், கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.n ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெட்டுக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலமுரளி தலைமை வகித்தார். வெட்டுக்குளம் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி காமராஜரின், கல்வி சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.n ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஆசிரியர் ராஜூ தலைமை வகித்தார். ஆசிரியர்கள் அன்பில் அமலன், ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.n பரமக்குடி அருகே கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழா தலைமை ஆசிரியர் சக்தி தலைமையில் நடந்தது. தமிழ் ஆசிரியை தேவசேனா வரவேற்றார். சமூக அறிவியல் ஆசிரியர் இளையராஜா பேசினார். கட்டுரை, பேச்சு, ஓவியம், வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. மாணவர்கள் பங்கேற்ற நாடகம் நடந்தது. கணித ஆசிரியர் ஆனந்தன் நன்றி கூறினார்.n பரமக்குடி அருகே சோமநாதபுரம் சவுராஷ்டிர தேசிய நடுநிலைப் பள்ளியில் தாளாளர் குப்புசாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி வரவேற்றார். தேசியக்கொடி ஏற்றி மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.n அகில இந்திய சத்ரிய நாடார் சங்கம் சார்பில் ராமநாதபுரம் அருகே இரட்டையூருணி கிராமத்தில் காமராஜர் சிலை முன்பாக பொங்கல் வைத்து மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். சங்கத்தின் நிறுவனத் தலைவர் வீரமணி தலைமை வகித்தர். மாநில துணைத் தலைவர் செல்வம், பொதுச் செயலாளர் காந்திராஜன், செயலாளர் நாகராஜன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நாடார் உறவின் முறை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் நாளிதழ் வழங்கி கொண்டாட்டம்

தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் சுடலை முத்து முன்னிலை வகித்தார். காமராஜர் பற்றிய பேச்சு ஓவிய கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அனைத்து மாணவர்களுக்கும் முதுகலை ஆசிரியர் மணிவண்ணன் எழுதிய காமராஜர் பிறந்தார், கல்விக் கண் திறந்தார் என்ற கட்டுரை வெளிவந்த தினமலர் நாளிதழ் வழங்கப்பட்டது. கணித ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார். தமிழாசிரியை விஜயலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை