உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி அழகு வள்ளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கமுதி அழகு வள்ளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கமுதி: கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் அழகு வள்ளியம்மன் கோயில் 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.மங்கள இசை, வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை முதல் கால, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. நேற்று மூன்றாம், நான்காம் யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.பின் அழகு வள்ளியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கமுதி உட்பட பல்வேறு பகுதியில் இருந்து கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !