உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கன்னிராஜபுரம் பி.எட்., கல்லுாரி 13வது பட்டமளிப்பு விழா

கன்னிராஜபுரம் பி.எட்., கல்லுாரி 13வது பட்டமளிப்பு விழா

சாயல்குடி:சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் உள்ள தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவிற்கு தாளாளர் சந்திரசேகர பாண்டியன் தலைமை வகித்தார். முதல்வர் குருசாமி வரவேற்றார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை டீன் அம்பேத்கர் பட்டம் வழங்கி பேசியதாவது: மாணவர்கள் ஆகிய நீங்கள் ஒவ்வொருவரும் மாதா, பிதா, குரு ஆகியவர்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும். தங்களிடம் படிக்க வரக்கூடிய மாணவர்களின் வளர்ச்சிக்கும் அவர்களின் ஊக்கத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். கல்லுாரி படிப்பு முடித்த பின் வாழ்க்கை எனும் பாடத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளது. ஆகவே ஈகை குணத்துடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். அதிகளவு நாளிதழ்களை படித்து திறமையை வளர்க்க வேண்டும். கல்லுாரியில் படித்த பெருமையை வெளியிடங்களில் வெளிக் கொண்டு வர வேண்டும் என்றார். கல்லுாரி குழு உறுப்பினர் சுசீலா மனுவேல் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 90 மாணவர்கள் பட்டம் பெற்றனர். ஏற்பாடுகளை தியாகி தர்மகண் அமிர்தம் பி.எட்., கல்லுாரி அமிர்தம் கல்வியியல் கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ