கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி அருகே கருங்களத்துார் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயில் மற்றும் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் நடைபெற்றது. இரண்டு கால யாகசாலை பூஜைகள், கோ பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடை பெற்றது. பின்னர் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்களால் கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கருங்களத்துார் கிராம மக்கள் செய்திருந்தனர்.