மேலும் செய்திகள்
ஐயப்பனுக்கு பங்குனி பூஜை
16-Mar-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது.முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு மின்வாரிய அலுவலகம் எதிரில்முதுவை சாஸ்தா அறக்கட்டளைக்கு பாத்தியமான ஐயப்பன் கோயில் கட்டும் பணி நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது. காலை 9:00 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனைகள் நடந்தது. அப்போது நிர்வாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை முதுவை சாஸ்தா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர். இன்று காலை நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர், எம்.பி.,கள் உட்பட முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
16-Mar-2025