விளக்கு பூஜை
கமுதி: அபிராமம் சாந்த கணபதி கோயிலில் உள்ள சுயம்புலிங்க துர்கை அம்மனுக்கு 35ம் ஆண்டு ஆடி கொடை விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது. கோயில் வளாகத்தில் 108 விளக்கு பூஜை நடந்தது. அப்போது பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் பாடல்களை பாடி கூட்டு வழிபாடு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சுயம்புலிங்க துர்கை அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.