மேலும் செய்திகள்
டூவீலரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
23-Jan-2025
ராமநாதபுரம், : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டம் சார்பில் பொதுமக்களுக்கு தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம், பிரசார வாகனத்தை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.தொழுநோயால் ஏற்படும் அங்க குறைபாட்டை தடுத்தல், தொழுநோய் பரவாமல் தடுத்தல் ஆகியவை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டம் சார்பில் ஸ்பாஷ் தொழுநோய் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடந்தது. அரசு நர்சிங் கல்லுாரி மாணவிகள் தொழுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஊர்வலம் முடிவடைந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜுன்குமார், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
23-Jan-2025