உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரம் கோயில் தீர்த்தம் ஊற்றும் பணியாளர்கள் நற்சான்று வழங்க கடிதம்

 ராமேஸ்வரம் கோயில் தீர்த்தம் ஊற்றும் பணியாளர்கள் நற்சான்று வழங்க கடிதம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியாளர்கள் போலீசாரின் நற்சான்று வழங்க வேண்டும் என கோயில் இணை ஆணையர் கடிதம் அனுப்பி உள்ளார். ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடும் பக்தர்களுக்கு யாத்திரை பணியாளர் சங்க உறுப்பினர்கள் 425 பேர் தீர்த்தம் வாரி இறைத்து ஊற்றுகின்றனர். இவர்களுக்கு ஒரு பக்தர் வழங்கும் கட்டணத்தில் இருந்து ரூ.12 ஈவுத்தொகையாக கோயில் நிர்வாகம் வழங்குகிறது. ஆனால் இந்த ஈவுத்தொகையை கடந்த இரு மாதங்களாக வழங்காததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக யாத்திரை பணியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரை யாத்திரை பணியாளர் சங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படியும், பக்தர்களின் பாதுகாப்பு கருதி யாத்திரை பணியாளர் சங்கம் மூலம் தீர்த்தம் இறைத்து ஊற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை மற்றும் முகவரி நகல், போலீசாரின் நற்சான்று கேட்டு கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால் இதுநாள் வரை எந்த சான்றும் அளிக்காததால் தங்களுக்கு வழங்க வேண்டிய ஈவுத்தொகை 1 கோடியே ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 456 ரூபாயும் வங்கி கணக்கில் உள்ளது. இச்சூழலில் கோயில் நிர்வாகம் ஈவுத்தொகை வழங்காமல் நிறுத்தி உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளீர்கள். இதன் மூலம் தவறான தகவல் வெளியாகி உள்ளது. எனவே தங்கள் உறுப்பினர்களுக்கான போலீசாரின் நற்சான்றிதழை துரிதமாக பெற்று கோயில் அதிகாரியிடம் ஒப்படைத்த பின் தங்களுக்கான ஈவுத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ