மேலும் செய்திகள்
மறுமணம் செய்து கொள்ளலாமா?
18-Sep-2025
திருவாடானை : திருவாடானையில் அக்.,15, 16 ஆகிய இரு நாட்கள் கலெக்டர் தலைமையில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமைகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு தாலுகாவிலும் கலெக்டர் தங்கி ஆய்வு செய்து வருகிறார். இந்த மாதம் திருவாடானையில் இம்முகாம் நடக்கிறது. இது குறித்து திருவாடானை தாசில்தார் ஆண்டி கூறியதாவது: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமிற்கு திருவாடானை தாலுகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அக்.,15, 16 ஆகிய இரு நாட்கள் இம் முகாம் கலெக்டர் தலைமையில் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடக்கிறது. இதற்கான முன் மனுக்கள் திருவாடானை, தொண்டி, மங்களக்குடி, புல்லுார் பிர்காக்களில் மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி தலைமையில் பெறப்படுகிறது. திருவாடானை தாலுகாவை சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம் என்றார்.
18-Sep-2025