உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்

விபத்தை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்

திருவாடானை: ரோட்டின் வளைவுகளில் விபத்தை தவிர்க்க ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தினர்.திருவாடானை, தொண்டி பகுதியில் கிராமப்புற ரோடுகளில் சில பகுதிகளில் போதிய அளவு மின்விளக்கு வசதி இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். பழயணக்கோட்டை, அஞ்சுகோட்டை, மாதவன்கோட்டை, மங்களக்குடி போன்ற பல்வேறு கிராம சாலைகளில் வளைவு பகுதியில் வெளிச்சம் இல்லாததால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது.இதைத் தவிர்க்க முக்கிய வளைவுப் பகுதிகளில் அறிவிப்பு பலகை, மின்விளக்கு வசதி வேண்டும். ரோட்டின் வளைவு பகுதியில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும். இதனால் விபத்து தவிர்க்கப்படும் என வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !