பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாத இலவச கழிப்பறை
பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் உள்ள இலவச கழிப்பறை பராமரிப்பு இன்றி, கழிவுநீர் தேங்கி, டைல்ஸ் கற்கள் சேதமடைந்து இருப்பதால் பயணிகள் பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் 2014-- 15ம் நிதி ஆண்டில் ரூ. 2 லட்சத்தில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக டைல்ஸ் பதிக்கப்பட்டு நவீன இலவச கழிப்பறை அமைக்கப்பட்டது. தொடர் பராமரிப்பு இல்லாமல் கழிப்பறை வளாகத்தில் டைல்ஸ்கற்கள் பெயர்ந்து பயணிகளின் கால்களை பதம் பார்க்கிறது. கழிவுநீர் தேங்குகிறது, பாத்ரூம் கதவுகள் சேதமடைந்துள்ளன. இதனால் கழிப்பறை பயணிகள் பயன்படுத்த முடியவில்லை. அருகில் உள்ள கட்டண கழிப்பறைகளும் போதிய அளவில் பராமரிக்கப்படாமல் உள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆகவே பயணிகளின் சுகாதாரம் கருதி கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க, சேதமடைந்த தரைத்தளம், கதவுகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.