உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கஞ்சா பொட்டலம் வைத்திருந்தவர் கைது

கஞ்சா பொட்டலம் வைத்திருந்தவர் கைது

ஆர்.எஸ்.மங்கலம்: தொண்டி வெள்ளை மணல் தெரு, தெற்கு தோப்பு பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லா மகன் சையது இப்ராகிம் 37. இவர் டூவீலரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தொண்டியில் இருந்து உப்பூர் சென்றுள்ளார். இந்த நிலையில் ஏ.மணக்குடி பகுதியில் திருப்பாலைக்குடி போலீஸ் எஸ்.ஐ., கோவிந்தன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை கண்டதும் சையது இப்ராகிம் டூவீலரை நிறுத்தாமல் சென்று உள்ளார். பின் தொடர்ந்த போலீசார் சையது இப்ராஹீமை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 5 கிராம் அளவிலான 8 பொட்டலங்களில் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. மொத்தம் 40 கிராம் கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்த போலீசார் சையது இப்ரகிமை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை